போலீஸ் பணிக்கான எழுத்துத்தேர்வு:2 மையங்களில் 3,567 பேர் எழுதுகிறார்கள்


போலீஸ் பணிக்கான எழுத்துத்தேர்வு:2 மையங்களில் 3,567 பேர் எழுதுகிறார்கள்
x

போலீஸ் பணிக்கான எழுத்துத்தேர்வை 2 மையங்களில் 3,567 பேர் எழுதுகிறார்கள்.

ஈரோடு

போலீஸ் பணிக்கான எழுத்துத்தேர்வை 2 மையங்களில் 3,567 பேர் எழுதுகிறார்கள்.

சப்-இன்ஸ்பெக்டர்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தீயணைப்பு துறை நிலைய அதிகாரி ஆகிய காலிப்பணியிடத்திற்கான எழுத்து தேர்வு மாநிலம் முழுவதும் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவு சீட்டு, அவர்கள் விண்ணப்பித்த இணையதளம் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வுக்காக ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கலை அறவியல் கல்லூரி, வேளாளர் என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய 2 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வினை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 567 பேர் எழுத உள்ளனர். பொது அறிவு தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மொழி திறனறிவு தேர்வு பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரையும் நடக்கிறது.

பாதுகாப்பு

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, 'ஈரோட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடக்கும் 2 மையங்களில் 300 போலீசாரும், தேர்வு மையத்துக்கு வெளியே 100 போலீசாரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். தேர்வர்கள் காலை 8 மணி முதல் தேர்வு மையத்துக்கு வரலாம். நவீன முறையில் சோதனை செய்யப்பட்ட பின்னர் தேர்வர்கள் தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

செல்போன், பை, மணிபர்ஸ், கால்குலேட்டர், புளுடூத், டிஜிட்டல் மற்றும் எலக்ட்ரானிக் வாட்ச் போன்ற எந்தவித எலக்ட்ரானிக் பொருட்களும் தேர்வு மையத்திற்குள் எடுத்து வர அனுமதி இல்லை. தேர்வு மையத்தின் முன்புறம் உள்ள பாதுகாப்பு அறையில் தாங்கள் எடுத்து வரும் பொருட்களை வைத்து விட்டு, எழுது பொருள் மற்றும் நுழைவு சீட்டினை மட்டும் தேர்வு மையத்துக்கு எடுத்து செல்ல வேண்டும்' என்றனர்.


Related Tags :
Next Story