பிளஸ்-1 மாணவியை காதலிக்க மிரட்டிய ஊர்க்காவல் படை வீரர் கைது


பிளஸ்-1 மாணவியை காதலிக்க மிரட்டிய ஊர்க்காவல் படை வீரர் கைது
x
தினத்தந்தி 10 Nov 2022 1:30 AM IST (Updated: 10 Nov 2022 1:30 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-1 மாணவியை காதலிக்க மிரட்டிய ஊர்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

சூரமங்கலம்:-

சேலம் கருப்பூர் அருகே உள்ள தேக்கம்பட்டியை பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 25), இவர் சேலம் மாநகர ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த, பிளஸ்-1 படிக்கும் 17 வயது சிறுமியை ஒருதலைபட்சமாக காதலித்தார். அந்த மாணவி காதலை ஏற்காத நிலையில், கடந்த 7-ந் தேதி காலையில் பள்ளிக்கு சென்ற சிறுமியிடம் தகராறு செய்து, காதலிக்கும் படி மிரட்டி உள்ளார்.

இதையடுத்து சிறுமியின் தாயார் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அறிவழகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

====


Next Story