பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x

பாளையங்கோட்டையில் பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பிறந்த நாள்

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாளையங்கோட்டை பஸ்நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு நேற்று அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. சார்பில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா. ஆவுடையப்பன், மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் அவைத்தலைவர் சுப.சீதாராமன், மேயர் பி.எம்.சரவணன், மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், மகேசுவரி, பாளையங்கோட்டை யூனியன் தலைவர் தங்கபாண்டியன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், துணைச் செயலாளர் மூளீகுளம் பிரபு, தலைமைச்செயற்குழு உறுப்பினர்கள் பேச்சிப்பாண்டியன், பிரபாகரன், வக்கீல் அணி கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர் செல்வசூடாமணி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, ஒன்றிய செயலாளர்கள் வேலவன்குளம் முருகன், அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அங்கு சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. அந்த பகுதியில் மரக்கன்றுகள் நட்டார்.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பாப்புலர் முத்தையா, எம்.ஜி.ஆர்.மன்ற மாநில துணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், பகுதி செயலாளர் ஜெனி, ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டிபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் மாவட்ட செயலாளர் பரமசிவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

காங்கிரஸ் கட்சி

காங்கிரசார் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாவட்ட துணைத்தலைவர் மாரியப்பன், பொருளாளர் ராஜேஷ் முருகன், பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகம் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் இரா.காசி தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ம.தி.மு.க. சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம், மாநில துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தே.மு.தி.க.வினர் நெல்லை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் மாநில குழு உறுப்பினர் ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

திராவிட தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் திருக்குமரன் தலைமையிலும், தமிழர் உரிமை மீட்பு களம் ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி தலைமையிலும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் நிர்வாகி கோபாலன் தலைமையிலும், தமிழ்புலிகள் கட்சியினர் நிர்வாகி பாலமுருகன் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


Next Story