அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
திருச்சி

அம்பேத்கரின் 133-வது பிறந்தநாளையொட்டி அம்பேத்கரின் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க.

அம்பேத்கரின் 133-வது பிறந்த நாளையொட்டி திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அவரது சிலைக்கு நேற்று அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்சி இ.பி. ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயலாளரும், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

இதேபோல் அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சார்பில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்தனர். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் மாநகர் மாவட்ட அவை தலைவர் ராஜ்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் ஜவகர்லால் நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பா.ஜ.க- காங்கிரஸ்

திருச்சி மாநகர், மாவட்ட பா.ஜ.க. சார்பில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் மாவட்ட தலைவர் ராஜசேகரன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட ஊடக பிரிவு தலைவர் இந்திரன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கவுன்சிலர் ரெக்ஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து அம்பேத்கர் சிலைக்கு அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் நிர்வாகிகள் சாத்தனூர் ராமலிங்கம், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தே.மு.தி.க.

தே.மு.தி.க சார்பில் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் மாலை அணிவித்தார். பின்னர் பகுதி செயலாளர்கள், தொண்டரணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பா.ம.க. சார்பில் அம்பேத்கர் சிலைக்கு திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட தலைவர் தினேஷ் தலைமையில் மாநில செயலாளர் டாக்டர் புரட்சி மணி மற்றும் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முசிறி

முசிறி கைகாட்டியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா விடுதலை சிறுத்தைகள் கட்சி முசிறி சட்டமன்ற தொகுதி செயலாளர் கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியிலும் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.


Next Story