அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை


அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை
x
தினத்தந்தி 16 Sept 2022 12:30 AM IST (Updated: 16 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி திண்டுக்கல்லில் அவருடைய சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திண்டுக்கல்

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா நேற்று திண்டுக்கல்லில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல்லில் உள்ள அண்ணா சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் காந்திராஜன் எம்.எல்.ஏ., மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜன், தண்டபாணி, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மரியாதை

அதேபோல் அ.தி.மு.க. சார்பில் கழக அமைப்பு செயலாளர் மருதராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கண்ணன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், துணை தலைவர் ராஜன், பகுதி செயலாளர்கள் சேசு, மோகன், சுப்பிரமணி, முரளிதரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் பசும்பொன் உள்ளிட்டோரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். ம.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் செல்வேந்திரன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் அ.ம.மு.க. சார்பில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்தனர்.

கொடைக்கானல்

இதே போல் கொடைக்கானல் நகர தி.மு.க. சார்பில் நடந்த விழாவுக்கு நகர செயலாளர் முகமது இப்ராகிம் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராஜதுரை, கருமலைபாண்டி, நகராட்சி கவுன்சிலர்கள் தேவி செல்வராஜ், கலாவதி தங்கராஜ், உள்பட பலர் கலந்து கொண்டு பிரையண்ட் பூங்கா எதிரே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நகர அ.தி.மு.க. சார்பில் நடந்த விழாவுக்கு முன்னாள் நகராட்சி தலைவரும், அ.தி.மு.க. நகர செயலாளருமான .ஸ்ரீதர் தலைமை தாங்கினார். விழாவில் நகர அவைத்தலைவர் ஜான்தாமஸ், மேல்மலை ஒன்றிய செயலாளர் பொன்னுத்துரை, நகராட்சி கவுன்சிலர்கள் சுப்பிரமணிபால்ராஜ், இருதய ராஜா, ஜெயசுந்தரம், மாவட்ட பிரதிநிதி ஆவின் பாரூக், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ம.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர செயலாளர் தாவூது தலைமையில் நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோபால்பட்டி, பட்டிவீரன்பட்டி

சாணார்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கோபால்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நடந்த விழாவுக்கு ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமை தாங்கி, அண்ணாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

விழாவில் அ.தி.மு.க. சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ்பாபு, ஹரிகரன், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜேந்திரன், இணை செயலாளர்கள் சேகர், விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பட்டிவீரன்பட்டி ரேடியோ மைதானத்தில் நடந்த விழாவுக்கு தி.மு.க. நகர செய்லாளர் அருண்குமார் தலைமை தாங்கி, மைதானத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். விழாவில் பட்டிவீரன்பட்டி பேரூராட்சி துணை தலைவர் கல்பனாதேவி, பேரூராட்சி கவுன்சிலர் ரத்தினவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எம்.வாடிப்பட்டியில் சேவுகம்பட்டி தி.மு.க. நகர செயலாளர் தங்கராஜன் தலைமையிலும், அய்யம்பாளையத்தில் தி.மு.க. நகர செயலாளர் தங்கராஜ் தலைமையிலும் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

சின்னாளப்பட்டி, நத்தம்

ஆத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சின்னாளபட்டி காந்தி திடல் பகுதியில் நடந்த விழாவுக்கு ஒன்றிய செயலாளர் மயில்சாமி தலைமை தாங்கி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் விஜயபாலமுருகன், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் கிரசர் பாலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அ.தி.மு.க. சார்பில் நத்தம் பஸ் நிலையம் அருகே நடந்த விழாவுக்கு நகர செயலாளர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நகர அவைத்தலைவர் சேக்ஒலி, பொருளாளர் சீனிவாசன் பலர் கலந்துகொண்டு அண்ணாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிலக்கோட்டை

நிலக்கோட்டை நால்ரோடு அருகே நடந்த விழாவுக்கு அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமை தாங்கி அண்ணாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். விழாவில் முன்னாள் எம்.பி. உதயக்குமார், அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story