அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு அரசில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நினைவு தினம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்பேத்கார் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு, அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் அம்பேத்கார் உருச்சிலைக்கு மாலை அணிவித்தும், அலங்கரித்து வைக்கப்பட்ட அம்பேத்கார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.

தி.மு.க.

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் உருவச்சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி மேயரும், பொதுக்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவர் அணி துணை செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, துணை செயலாளர் ஆறுமகம், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட இளைஞர் அணி மதியழகன், மாவட்ட மகளிரணி செயலாளர் கஸ்தூரிதங்கம், வர்த்தக அணி வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகர இளைஞரணி ஆனந்த் கேபிரியேல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்

தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமையில் காங்கிரசார் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட அம்பேத்கர் மக்கள் தேசிய இயக்கம் தலைவர் எம்ஆறுமுகம் தலைமையில், மாவட்ட விவசாயிகள் அணி செயலாளர் மாயாண்டி முன்னிலையில், மாவட்ட செயலாளர் ரகுநாதன், அம்பேத்கார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் எம்.சேகர், துணை செயலாளர் ஜெயசூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story