காந்தி சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


காந்தி சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x

அரியலூரில் காந்தி சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அரியலூர்

மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரியலூர் புதிய மார்க்கெட் தெருவில் உள்ள கதர் விற்பனை அங்காடியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியின் உருவப்படத்திற்கு கலெக்டர் ரமண சரஸ்வதி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கதர் விற்பனை அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரியலூரில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர் மற்றும் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சங்கர், மாநில துணை தலைவர் ராஜேந்திரன், நகர தலைவர் சிவக்குமார், வட்டார தலைவர்கள், மாநில பொதுகுழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், துணை பிரிவு தலைவர்கள், நகர தலைவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story