கன்னியாகுமரி உதயமான தினம்: மார்ஷல் நேசமணி சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாியாதை
கன்னியாகுமரி தினத்தையொட்டி, நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணி சிலைக்கு அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட கலெக்டர் அரவிந்த் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி தினத்தையொட்டி, நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணி சிலைக்கு அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட கலெக்டர் அரவிந்த் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நேசமணி சிலைக்கு மரியாதை
கேரளாவில் இருந்து குமரி கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி பிரிக்கப்பட்டு, தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் நேற்று கன்னியாகுமரி உதயம் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகர்கோவில் வேப்பமூட்டில் உள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மாியாதை செலுத்தப்பட்டது.
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் மனோதங்கராஜ், மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த், பிரின்ஸ் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், மார்ஷல் நேசமணி பேரன் ரஞ்சித் அப்பலோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடா்ந்து குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைக்கப்பட்ட நாளினை நினைவு கூறும் வகையில், பள்ளி மாணவர்கள் இடையே நடத்தப்பட்ட பேச்சு மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
அ.தி.மு.க.- காங்கிரஸ்
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்புள்ள மார்ஷல் நேசமணி சிலைக்கு குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கழக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர் பச்சைமால், மாவட்ட அவைத் தலைவர் சேவியர் மனோகரன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கிருஷ்ணதாஸ் மற்றும் நிர்வாகிகள் ஜெசீம், அக்ஷயா கண்ணன், சந்துரு, லட்சுமணன், ஜெயகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமையில் விஜய்வசந்த் எம்.பி. நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட துணை தலைவர் மகேஷ் லாசர், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் ராஜபாண்டியன், சிவபிரபு, சுதந்திரதாஸ், பிரவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பட்டாளி மக்கள் கட்சி
குமரி கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மார்ஷல் நேசமணி சிலைக்கு மாவட்ட செயலாளர் கில்மன் புரூஸ் எட்வின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநிலத் துணைத் தலைவர் ஐசியாஸ் மிசா, மாவட்டத் தலைவர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் குமார், சகாயராஜ், ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோல் மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்புள்ள மார்ஷல் நேசமணி சிைலக்கு மாவட்ட தலைவர் அருள்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வணிகர்கள் மகாஜன சங்கம்
வணிகர்கள் மகாஜன சங்கத்தின் சார்பில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு உள்ள மார்ஷல் நேசமணி சிலைக்கு வணிகர்கள் மகாஜன சங்க மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.ராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் வணிகர்கள் மகாஜன சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.