மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது


மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
x

கும்பகோணத்தில், மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணத்தில், மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

மறியல்

கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி, ஒன்றிய செயலாளர் பாலன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் அத்தியாவசிய பொருட்களின் கடுமையாக விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மருந்து பொருட்கள் மீதான 10 சதவீத விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும்.

கைது

அரிசி, மாவு, தயிர், வெண்ணெய், நெய் போன்ற உணவுப் பொருட்கள், ஈமச்சடங்கு செய்யும் மயானச் செலவினம், கைத்தறி மற்றும் அதன் மூலப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முன்னதாக மறியலில் ஈடுபட்டவர்கள் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

திருவிடைமருதூர்

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தபால் அலுவலகம் எதிரில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர் கண்ணகி தலைமை தாங்கினார். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.இதே ே பால பாபநாசத்தில் மறியல் .போராட்டத்தில் ஈடுபட்ட 18 பெண்கள் உட்பட 50 பேரை பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி கைது செய்தார்.


Next Story