தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் கூட்டம்
கும்பகோணத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
கும்பகோணம்;
கும்பகோணத்தில் தமிழக வாழ்வுரிமைக்கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் வாசுராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் வரதராஜன், கும்பகோணம் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், மாவட்ட துணைத்தலைவர் ரவிசங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தொழிற் சங்க பொதுச்செயலாளர் ஜம்புலிங்கம், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் செல்வம் ஆகியோர் பேசினர்.கூட்டத்தில், பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து துணை வாய்க்கால்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும், வருகிற 16-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) தமிழக வாழ்வுரிமை கட்சி தலைமை அறிவித்துள்ளபடி சாதி வாரி கணக்கெடுப்பு நடத்திடக்கோரி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைகளை சுத்தப்படுத்த கேட்பது, என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக மாவட்ட துணை செயலாளர் பிரபு வரவேற்றார். முடிவில் மணிவண்ணன் நன்றி கூறினார்.