ஒப்பாரி வைத்து காத்திருப்பு போராட்டம்


ஒப்பாரி வைத்து காத்திருப்பு போராட்டம்
x

விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்கக்கோரி பாபநாசத்தில் ஒப்பாரி வைத்து காத்திருப்பு போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நடந்தது

தஞ்சாவூர்

பாபநாசம்;

விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்கக்கோரி பாபநாசத்தில் ஒப்பாரி வைத்து காத்திருப்பு போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நடந்தது. இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

ஒப்பாரி வைத்து போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு சாலையில் பிணம் போல படுத்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடந்தது. போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் காதர் உசேன், நகர செயலாளர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.போராட்டத்தில் பண்டாரவாடை மற்றும் அரையபுரம் வடிகால் நீர்வளத் துறையின் சார்பில் வாய்க்காலை விரைவில் தூர்வார வேண்டும். விவசாயிகளுக்கு முறையாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு வரை தொடா்ந்து நீ்்டித்தது.

உடன்பாடு ஏற்படவில்லை

இது குறித்து தகவல் அறித்த பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, தாசில்தாா் பூங்கொடி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நீடித்தது.


Next Story