பாலிடெக்னிக் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
கரூர் அருகே பாலிடெக்னிக் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாலிடெக்னிக் மாணவி
கரூர் அருகே உள்ள ஆத்தூர் சோழன் நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவருடைய மகள் பூஜா (வயது 16). இவர் தென்னிலை அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பூஜா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. .
தற்கொலை
இதனால் மனம் உடைந்து காணப்பட்ட பூஜா சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் பானுமதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர் பூஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலிடெக்னிக் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.