Normal
பாலிடெக்னிக் மாணவர் விஷம் குடித்து தற்கொலை
தொப்பூர் அருகே பாலிடெக்னிக் மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தர்மபுரி
நல்லம்பள்ளி:
தொப்பூர் அருகே காட்டுவளவு கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 19). இவர் நல்லம்பள்ளி அருகே உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இ.இ.இ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் லோகநாதன் தீராத நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்று தெரிகிறது. இதனால் மனம் உடைந்த லோகநாதன் வீட்டுக்கு அருகே உள்ள நிலத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே லோகநாதன் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story