புதர் சூழ்ந்து காணப்படும் குளம்


புதர் சூழ்ந்து காணப்படும் குளம்
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாய்மேடு அருகே புதர் சூழ்ந்து காணப்படும் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேடு அருகே புதர் சூழ்ந்து காணப்படும் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதர் சூழ்ந்த குளம்

நாகை மாவட்டம் தகட்டூர் கடைத்தெருவில் ஊத்தா வெட்டி குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. 20-க்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன. கடைத்தெருவுக்கு நடுவில் அமைந்துள்ளது ஊத்தா வெட்டி குளம்.

இந்த குளம் முறையாக தூர்வாரப்படவில்லை. இதன் காரணமாக குளத்தில் ஆகாயத்தாமரைகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மேலும் குளத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதராக காட்சி அளிக்கிறது.

தூர்வார நடவடிக்கை

குளம் உள்ள பகுதி புதர்காடு போல காணப்படுவதால், குளம் இருப்பதே தெரியவில்லை.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலமுறை புகார் அளித்தும் குளத்தை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

குளத்தை தூர்வாரி முறையாக பராமரித்து தண்ணீர் தேக்கி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

கொசுத்தொல்லை

தகட்டூர் கடைத்தெருவில் உள்ள ஊத்தா வெட்டி குளம் முழுவதுமாக தூர்வாரப்படவில்லை. புதர் சூழ்ந்து காட்சி அளிக்கிறது. தற்போது கொசு உற்பத்தி கூடாரமாக குளம் மாறி உள்ளது. இப்பகுதியில் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. குளத்தை பல ஆண்டுகளாக தூர்வாரவில்லை. இதனால் குளத்தில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

பயன்படுத்த முடியும்

குளம் தூய்மையாக இருந்தால் பல வகைகளிலும் பயன்படுத்த முடியும். குளத்தில தண்ணீர் தேங்கி நிற்கும்போது நிலத்தடி நீர் மட்டமும் உயரும். எனவே குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை தூர்வார வேண்டும்.இவ்வாறு நடவடிக்கை எடுத்தால் பொதுமக்களுக்கு ஏதுவாக இருக்கும். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து தகட்டூர் கடைத்தெருவில் அமைந்துள்ள ஊத்தா வெட்டி குளத்தை தூர்வார வேண்டும்.

இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.


Next Story