வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா


வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா
x

வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வரிசைபட்டியில் இயங்கி வரும் வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரி, வரதராஜன் தொழில்துறை பயிற்சி நிறுவனம் மற்றும் வரத விகாஸ் பப்ளிக் பள்ளி சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வரதராஜன் கல்வி அறக்கட்டளையின் தலைவர் எம்.என்.ராஜா தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் அருள் பிரபாகர் அனைவரையும் வரவேற்றார். விழாவில் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் என 50 குழுக்களாக பிரிக்கப்பட்டு கல்லூரி வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி கரும்பு மற்றும் மஞ்சள் கொத்துக்களோடு புதுப்பானையில் சர்க்கரை பொங்கலிட்டு சாமிக்கு படைத்தனர். விழாவில் மாணவ-மாணவிகள் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டும் அதனை தொடர்ந்து பாரம்பரிய நடனங்களான கரகாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், மான் ஆட்டம், மயிலாட்டம், காளை ஆட்டம், புலியாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், பூங்கரகம், பொய்க்கால் குதிரை, உறுமி மேளம், நாதஸ்வரம் மற்றும் மேளம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. வீர விளையாட்டுக்களான உறியடித்தல், சறுக்கு மரம், பானை உடைத்தல், கபடி, நொண்டியடித்தல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, ஆகிய போட்டிகளும் நடைபெற்றன. பொங்கல் விழாவில் மாணவர்கள் வேட்டி- சட்டை அணிந்தும், மாணவிகள் புடவை அணிந்தும் கலந்து கொண்டனர். பொங்கல் விழாவை முன்னிட்டு பெற்றோர்களுக்கு சிறப்பு போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள், பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல், கரும்பு வழங்கப்பட்டது. விழாவில் ஸ்ரீ வரதராஜன் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், நிர்வாக அலுவலர் லல்லி, வழக்கறிஞர் ரகுபிரனேஷ் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி முதல்வர் ராமலிங்கம் நன்றி கூறினார்.


Next Story