பொங்கல் பண்டிகை ெபாருட்கள் இறுதிக்கட்ட விற்பனை
தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகை பொருட்கள் இறுதிக்கட்ட விற்பனை நடைபெற்றது.
தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகை பொருட்கள் இறுதிக்கட்ட விற்பனை நடைபெற்றது.
இறுதிக்கட்ட விற்பனை
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது மக்கள் கரும்பு, மஞ்சள்குலை, வாழைத்தார், பனங்கிழங்கு, பொங்கல் பூ, காய்கறிகள் உள்ளிட்டவற்றை படைத்து வழிபாடு செய்வது வழக்கம். இதனால் நேற்று காய்கறிகள் மற்றும் பொங்கல் பொருட்களின் இறுதிக்கட்ட விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. பொங்கல் பொருட்கள் வாங்க தூத்துக்குடி மார்க்கெட்டில் மக்கள் குவிந்தனர். இதனால் காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. அதேப்போன்று பூக்களின் வரத்து குறைவு காரணமாக விலையும் உயர்ந்து காணப்பட்டது.
தினசரி சந்தையில் (ஒரு கிலோ) பீர்க்கங்காய் ரூ.250, முருங்கைக்காய் ரூ.200, சீனி அவரைக்காய் ரூ.120, வெண்டைக்காய் ரூ.120, சின்ன வெங்காயம் ரூ.80, பெரிய வெங்காயம் ரூ.30, அவரைக்காய் ரூ.70, தக்காளி ரூ.40, புடலைங்காய் ரூ.60, மாங்காய் ரூ.80, கத்தரிக்காய் ரூ.60 முதல் ரூ.70 வரை, முட்டைகோஸ் ரூ.15, பூசணிக்காய் ரூ.25, பீன்ஸ் ரூ.50, சிறுகிழங்கு ரூ.40 வரை, கேரட் ரூ.80, சவ்சவ் ரூ.20, முள்ளங்கி ரூ.25, தடியங்காய் ரூ.20, இஞ்சி ரூ.60, மல்லி ரூ.40, முருங்கைக்காய் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பூக்கள்
இதுதவிர 15 எண்ணம் கொண்ட ஒரு கரும்பு கட்டு ரூ.400 முதல் ரூ.450 வரையும், இலைக்கட்டு (5 எண்ணம்) ரூ.30, மஞ்சள் குலை ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது.
இதே போல், பூ மார்க்கெட்டில் (ஒரு கிலோ) மல்லி ரூ.3,000, பிச்சிப்பூ ரூ.3,000, ரோஸ் (ஓசூர்) ரூ.300, செவ்வந்தி (வெள்ளை) ரூ.260, செவந்தி (மஞ்சள்) ரூ.200, அரளி ரூ.400, கனகாம்பரம் ரூ.1,500, சம்பங்கி ரூ.250, கேந்தி ரூ.80 என விற்பனையானது. பனி காரணமாக மல்லிகைப்பூ வரத்து இல்லாததால் விலை அதிகமாக இருந்தாலும் விரைவில் விற்று தீர்ந்தது.
போக்குவரத்து நெருக்கடி
காய்கறிகள் மற்றும் பொங்கல் பொருட்கள் வாங்க நேற்று காலை முதல் மக்கள் கூட்டம் மார்க்கெட்டில் அதிகரித்தது. இதனால் மார்க்கெட் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தூத்துக்குடியின் முக்கிய வீதிகளில் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் தலைகளாக காணப்பட்டது. இதையொட்டி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரிசெய்தனர்.