பரமக்குடி நகராட்சியில் பொங்கல் விழா
பரமக்குடி நகராட்சியில் பொங்கல் விழா நடந்தது.
ராமநாதபுரம்
பரமக்குடி,
பரமக்குடி நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் மீரா அலி முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் முருகன் வரவேற்றார். நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, துணைத்தலைவர் குணசேகரன் ஆகியோர் சிறப்பு பூஜை செய்து பொங்கல் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் அப்துல் மாலிக், வடமலையான், ஜீவரத்தினம், தேவகிட்டு உள்பட நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். நகராட்சி மேலாளர் தங்கராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story