குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அண்ணாதுரை எம்.பி. வழங்கினார்


குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அண்ணாதுரை எம்.பி. வழங்கினார்
x

ஜோலார்பேட்டை பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அண்ணாதுரை எம்.பி. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் தாமலேரிமுத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 8,211 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கபடவுள்ளது. தாமலேரிமுத்தூர் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்பரிசு தொகுப்பு வழங்கும்நிகழ்ச்சி நேற்று நடந்தது. சி.என்.அண்ணாதுரை எம்.பி. கலந்துகொண்டு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு கரும்பு மற்றும் ரூ.1,000 பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் முருகேசன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் சூர்யாகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக முதுநிலை மண்டல மேலாளர் திருகுணஐயப்பத்துரை, மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) சரஸ்வதி, துணைப்பதிவாளர் பாலசுப்ரமணியன், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யா சதிஷ் குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் சங்க செயலாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.


Next Story