பொங்கல் பரிசு தொகுப்பு நாளை முதல் வினியோகம்


பொங்கல் பரிசு தொகுப்பு நாளை முதல் வினியோகம்
x

பொங்கல் பரிசு தொகுப்பு நாளை முதல் வினியோகம் செய்யப்படுகிறது.

திருப்பத்தூர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கான நடவடிக்கையை பொதுவினியோகத்துறை மேற்கொண்டு வருகிறது. அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஒன்று மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

இந்த பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் வினியோகம் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. பொருட்கள் வழங்கும் பணி நாளை தொடங்குகிறது.

இதைமுன்னிட்டு பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைத்தல் போன்ற பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் ஒரேநேரத்தில் ரேஷன் கடைகளில் குவிவதை தடுக்க டோக்கனில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தேதி, நேரத்தில் பொதுமக்கள் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். வருகிற 13-ந் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.

பிற பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்க நேரம் இருக்காது என்பதால் ஒரு வாரம் கழித்து பிற பொருட்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story