2 லட்சத்து 19 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு


2 லட்சத்து 19 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

2 லட்சத்து 19 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழக அரசு அனைத்து அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 794 அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.

கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கள் வினியோகிக்கப்பட இருக்கிறது. அதில் பொங்கல் பரிசு வழங்கப்படும் நாள், நேரம் குறிப்பிட்டு இருக்கும். அந்த டோக்கன்கள், வருகிற 3-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை வீடு, வீடாக சென்று ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்படும். இதற்காக வருகிற 6-ந் தேதி வார விடுமுறை நாளில் ரேஷன் கடை செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story