கழுகுமலையில் பொங்கல் விளையாட்டு போட்டி:அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம்


கழுகுமலையில் பொங்கல் விளையாட்டு போட்டி:அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம்
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில் நடந்த பொங்கல் விளையாட்டு போட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழரின் தைப்பொங்கல் விழா குழுவினர் சார்பில் 25-ம்ஆண்டு வெள்ளி விழா மற்றும் கலை இலக்கிய விழா, கவிதை போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, பாட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

இதில் கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் 4 தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினர். இதில் அனைத்து வகை விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது. இதற்கான சிறப்பு விருதினை கழுகுமலை தமிழரின் தைப்பொங்கல் விழா குழுவினர் நேற்று அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சீத்தாமகேஸ்வரியிடம் வழங்கி பாராட்டினர். இந்த நிகழ்ச்சியில் என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் பால்சாமி, ஆசிரியர்கள் ராஜகோபால், கந்தையா, கல்யாணசுந்தரம், மாரிகனி, சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story