மாயவர் சாமி கோவில் பொங்கல் விழா


மாயவர் சாமி கோவில் பொங்கல் விழா
x
திருப்பூர்


நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை ஊராட்சி நல்லமாள்புரம் மாயவர் சாமி கோவில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மை அழைத்தல், படைக்கல பூஜை, மாயவர் சாமி நொய்யல் ஆற்றுக்கு செல்லுதல், ஆற்றில் இருந்து திரும்பி வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து மாயவர் சாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு புதிய பட்டாடை உடுத்தப்பட்டு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது.

முடிவில் பக்தர்களுக்கு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வானவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சர்க்கரை பொங்கல் வைக்கப்பட்டு, மறு பூஜையுடன் விழா நிறைவடைந்தது.

விழாவில் திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், கோவை, சேலம், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கோவில் குல மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள்


Next Story