அதிகபட்சமாக பொன்னையில் 20 மில்லி மீட்டர் மழை பதிவானது


அதிகபட்சமாக பொன்னையில் 20 மில்லி மீட்டர் மழை பதிவானது
x

அதிகபட்சமாக பொன்னையில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

வேலூர்

வடகிழக்கு பருவமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காலை முதல் இரவு வரை சாரல் மற்றும் மிதமான மழை தொடர்ந்து பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் மழைநீர் தேங்கியது. மழையினால் வேலூர் சம்பத்நகர், கோரிமேடு, முள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியது. அவற்றை மாநகராட்சி நல அலுவலர் முருகன் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் மின்மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தொரப்பாடி அரசுப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மழையினால் வேலூர், அணைக்கட்டு பகுதிகளில் 5 வீடுகள் லேசாக சேதம் அடைந்தன.

தொடர் மழை காரணமாக ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நேற்று காலையிலும் சிறிதுநேரம் சாரல் மழை பெய்தது. அதன் பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக பொன்னை பகுதியில் 20.20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

வேலூர்-17.10, மேல்ஆலத்தூர்-13.20, அம்முண்டி-10.20, குடியாத்தம்-8.60, காட்பாடி-5.40.


Next Story