பொன்னியம்மன் கோவில் சித்திரை திருவிழா


பொன்னியம்மன் கோவில் சித்திரை திருவிழா
x
தினத்தந்தி 8 May 2023 12:15 AM IST (Updated: 8 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே தொழுதாலங்குடி பொன்னியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தொழுதாலங்குடி கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் 72-ம் ஆண்டு சித்திரை திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று விழாவின் முக்கிய நாட்களில் கரகம், காவடி, பால்குட சித்திரை திருவிழா நடந்தது. முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் சேத்திரபாலபுரம் காவேரி கரையிலிருந்து கரகம், காவடி, பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வாண வேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பொன்னியம்மன் நற்பணி மன்றத்தினர், கிராமமக்கள் செய்திருந்தனர்.


Next Story