சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,925-க்கு ஏலம்; ஒரே நாளில் 333 ரூபாய் விலை கூடியது
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,925-க்கு ஏலம் போனது. ஒரே நாளில் 333 ரூபாய் விலை கூடியது.
சத்தியமங்கலம்
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,925-க்கு ஏலம் போனது. ஒரே நாளில் 333 ரூபாய் விலை கூடியது.
பூக்கள் ஏலம்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்தில் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் 3 டன் பூக்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள்.
இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,925-க்கும், முல்லை ரூ.760-க்கும், காக்கடா ரூ.750-க்கும், செண்டுமல்லி ரூ.33-க்கும், பட்டுப்பூ ரூ.42-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும், அரளி ரூ.130-க்கும், ,துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போனது.
விலை அதிகரிப்பு
நேற்று முன்தினம் நடந்த ஏலத்தை விட நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோவுக்கு 333 ரூபாய் அதிகரித்தது. அதேபோல முல்லை ரூ.220-ம், காக்கடா ரூ.250-ம், பட்டுப்பூ ரூ.14-ம், கனகாம்பரம் ரூ.100-ம் அதிகரித்தது.
சென்டுமல்லி ரூ.25-ம், ஜாதிமல்லி ரூ.150-ம், சம்பங்கி ரூ.5-ம், அரளி ரூ.20-ம், செவ்வந்தி ரூ.20-ம் விலை குறைந்தது.
முகூர்த்த நாட்கள் இருப்பதால் மல்லி, முல்லை, காக்கடா, கனகாம்பரம், பட்டுப்பூ விலை உயர்ந்ததாக சங்க நிர்வாகிகள் கூறினார்கள்.