சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,435-க்கு ஏலம்- ஒரே நாளில் 783 ரூபாய் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி


சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,435-க்கு ஏலம்- ஒரே நாளில் 783 ரூபாய் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
x

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ஒரே நாளில் 783 ரூபாய் விலை அதிகரித்து ரூ.2 ஆயிரத்து 435-க்கு ஏலம் போனது.

ஈரோடு


சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ஒரே நாளில் 783 ரூபாய் விலை அதிகரித்து ரூ.2 ஆயிரத்து 435-க்கு ஏலம் போனது.

பூ மார்க்கெட்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்றும் வழக்கம்போல் பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 2½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

மல்லிகைப்பூ ரூ.2,345

நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்து 345-க்கும், முல்லை ரூ.1,600-க்கும், காக்கடா ரூ.1,300-க்கும், செண்டுமல்லி ரூ.75-க்கும், பட்டுப்பூ ரூ.90-க்கும், ஜாதிமல்லி ரூ.1,200-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.200-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் விற்பனை ஆனது.

நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,662-க்கும், முல்லை ரூ.940-க்கும், காக்கடா ரூ.850-க்கும், செண்டுமல்லி ரூ.63-க்கும், பட்டுப்பூ ரூ.120-க்கும், ஜாதிமல்லி ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.510-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.220-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போனது.

மகிழ்ச்சி

நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.783-ம், முல்லை ரூ.660-ம், காக்கடா ரூ.450-ம், செண்டுமல்லி ரூ.12-ம், ஜாதிமல்லி ரூ.450-ம், கனகாம்பரம் ரூ.190-ம், சம்பங்கி ரூ.10-ம், துளசி ரூ.10-ம், செவ்வந்தி ரூ.20-ம் விலை உயர்ந்து விற்பனை ஆனது. பெரும்பாலான பூக்கள் விலை அதிகரித்து விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக மல்லிகைப்பூ நேற்று ஒரே நாளில் மட்டும் கிலோ 783 ரூபாய் விலை அதிகரித்து விற்பனை ஆனதால் மல்லிகைப்பூ கொண்டு வந்த விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பூ மார்க்கெட் தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறுகையில் 'சத்தியமங்கலம் பகுதியில் பனிபொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்து காணப்பட்டது. அதேவேளையில் நாளை (அதாவது இன்று) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. குறிப்பாக கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை பெருமளவிலான பொதுமக்கள் கொண்டாடுவார்கள். இதனால் பூக்கள் அதிகமாக தேவைப்பட்டதால் கேரள வியாபாரிகள் போட்டி போட்டு பூக்களை ஏலம் எடுத்தனர். இதன்காரணமாக பூக்கள் விலை அதிகரித்தது,' என்றனர்.


Next Story