பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பிரதோஷத்தையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
நாமக்கல்:
பிரதோஷம்
நாமக்கல் தட்டார தெருவில் ஏகாம்பர ஈஸ்வரர் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாத பிரதோஷத்தையொட்டி சிவன் மற்றும் நந்தி பகவானுக்கு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. மேலும் பால், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் வள்ளிபுரம், புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிவன் மற்றும் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடந்தது.
பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் போன்ற கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.