அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்


அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில்   சிறப்பு அபிஷேகம்
x

அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

திருப்பூர்

அவினாசி

ஆடி அமாவாசையையொட்டி அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி அமாவாசை

ஆடி மாதம் என்றாலே பல்வேறு திருவிழாக்கள் நடக்கும் தெய்வீக மாதமாகும். அமாவாசைகளில் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகியவை சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது. ஆடி அமாவாசை தினத்தன்று நம் முன்னோர்கள் ஆசி வழங்க பூலோகத்திற்கு கிளம்பும் நாளாக கருதப்படுகிறது.

அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வகையில் ஆடி அமாவாசை என்று சிறப்பானதாக கருதப்படுகிறது. அவர்கள் ஆசி பெறும் வகையில் ஆடி அமாவாசை தினம் சிறப்பு வாய்ந்ததாக கடைபிடிக்கப்படுகிறது.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

சிறப்பு நிறைந்த ஆடி அமாவாசை தினமான நேற்று வரலாற்று சிறப்பு வாய்ந்த கருணாம்பிகை உடனர் அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடந்தது. காலை 5 மணி முதல் திருப்பூர், பூண்டி, கருவலூர், சேவூர், உள்ளிட்ட அவினாசி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் கோவில் வளாகத்திலுள்ள மடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது. இதேபோல் அவினாசி கரிவரதராஜப்பெருமாள் கோவில், ஆகாசராயர் கோவில், கருவலூர் மாரியம்மன் கோவில், பழங்கரை பொன்சோழீசுவரர் கோவில், உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


Related Tags :
Next Story