தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் ரூ.1½ கோடியில் வளர்ச்சி பணிகள்-பிரகாஷ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் ரூ.1½ கோடி மதிப்பில் சிமெண்டு சாலை, வடிகால்வாய்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மனோகரன், துணைத்தலைவர் அப்துல்கலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சீனிவாசன், துணை செயலாளர் இதயத்துல்லா, பொருளாளர் வெங்கடேஷ், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், வார்டு உறுப்பினர்கள் நாகலட்சுமி, கிருஷ்ணன், சுமதி, ரியானாபேகம், நாசிமா, மணிவண்ணன், லிங்கோஜி ராவூ, கவுரி சென்னீரா, பிரேமா சேகர், சீதா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story