இரணியல் அருகே முத்தாரம்மன் கோவிலில் பூஜை பொருட்கள் திருட்டு


இரணியல் அருகே முத்தாரம்மன் கோவிலில் பூஜை பொருட்கள் திருட்டு
x

இரணியல் அருகே முத்தாரம்மன் கோவிலில் பூஜை பொருட்கள் திருட்டு போனது.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

இரணியல் காற்றாடிமூடு சந்திப்பில் இருந்து முட்டம் செல்லும் சாலையில் செக்காலத்தெரு முத்தாரம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் காலை, மாலையில் பூஜை நடந்து வருகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று காலையில் பூசாரி கணேஷ் பூஜையை முடித்து விட்டு பிரசாதம் மற்றும் பூஜைக்கு பயன்படுத்திய பித்தளை உருளி, நெய்வேத்திய தட்டு, பித்தளை கிண்ணங்கள், கரண்டி போன்ற பாத்திரங்களை சுத்தம் செய்ய தண்ணீரில் ஊற வைத்து விட்டு சென்றாராம். மாலையில் வந்து பார்த்த போது பித்தளை பாத்திரங்களை காணவில்லை. இவற்றின் மதிப்பு ரூ.10 ஆயிரமாகும். பூசாரி வெளியே சென்ற நேரத்தில் மர்மஆசாமி நைசாக கோவிலுக்குள் புகுந்து பித்தளை பாத்திரங்களை திருடியிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து இரணியல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

---


Next Story