ஆடி வெள்ளி, லட்சுமி விரதத்தையொட்டி மோகனூர், நாமகிரிப்பேட்டை அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி வெள்ளி, லட்சுமி விரதத்தையொட்டி  மோகனூர், நாமகிரிப்பேட்டை அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

ஆடி வெள்ளி, லட்சுமி விரதத்தையொட்டி மோகனூர், நாமகிரிப்பேட்டை அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

நாமக்கல்

மோகனூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி மற்றும் லட்சுமி விரதத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. மோகனூர் அம்மன் அறக்கட்டளை சார்பில் பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்து, 5,008 வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடைபெற்று, இரவு நாதஸ்வர கச்சேரி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது,

இதேபோல் நாமகிரிப்பேட்டையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில், ஆர்.புதுப்பட்டி சூடாமணி அம்மன் கோவில் மற்றும் கிராம பகுதியில் உள்ள கோவில்களில் வரலட்சுமி விரதம் மற்றும் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story