ஆரியூர் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை


ஆரியூர் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
x

ஆரியூர் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் அருகே உள்ள ஆரியூர் அங்காளம்மன் கோவிலில் ஆடி மாத 3-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி புடவை கும்பிடுதல் நிகழ்ச்சி நடந்தது. மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் கும்பத்திற்கு மலர் அலங்காரம் செய்து வேல், கொடுவாள், பட்டாகத்தி, பால், தீர்த்தக்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து ஆரியூர் அங்காளம்மன் கோவிலில் அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது, தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள மயானத்திற்கு சென்று சாமி கும்பிட்டு மீண்டும் கோவில் வந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மோகனூர், வெங்கரை உள்பட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சரி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story