பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கைது
ராமநாதபுரத்தில் மறியலில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்
நாடு முழுவதும் நேற்று பாப்புலர் பிரண்ட் அலுவலகங்களிலும், நிர்வாகிகள் வீடுகளிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையிட்டார்கள். இதனை கண்டித்து ராமநாதபுரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன்படி ராமநாதபுரம் புதிய பஸ்நிலையம் அருகில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் மாவட்ட தலைவர் செய்யது முகம்மது இப்ராகிம் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், சிவகங்கை மாவட்ட தலைவர் மன்சூர், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சேக் தாவூத் மற்றும் 4 பெண்கள் உள்பட 26 பேர் கலந்துகொண்டனர். இவர்களை கேணிக்கரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story