பிரபல யூ-டியூபர் இர்பானின் கார் மோதி பெண் உயிரிழப்பு


பிரபல யூ-டியூபர்  இர்பானின் கார் மோதி பெண் உயிரிழப்பு
x

செங்கல்பட்டு, மறைமலை நகர் பகுதியில் பிரபல யூ-டியூபர் இர்பானின் கார் மோதி சாலையை கடக்க முயன்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சென்னை,

பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே நேற்றிரவு யூடியூபர் இர்பானுக்கு சொந்தமான சொகுசு கார் ஒன்று மோதி 55 வயதான பத்மாவதி என்ற மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் செங்கல்பட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் காரை ஓட்டி வந்த அசாரூதின் என்பவரை கைது செய்து மறைமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து நடந்த போது யூடியூபர் இர்பான் காரில் இருந்தாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.


Next Story