தூத்துக்குடியில் மக்கள் தொகை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்


தூத்துக்குடியில் மக்கள் தொகை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
x

தூத்துக்குடியில் மக்கள் தொகை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திங்கட்கிழமை தொடங்குகிறது.

தூத்துக்குடி

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 11-ந் தேதி உலக மக்கள் தொகை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் தொகையை கட்டுக்குள் வைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குடும்ப கட்டுப்பாடு முறைகளை ஏற்போம், நம் முன்னேற்றத்தில் புதிய அத்தியாயம் படைப்போம் என்ற கருப்பொருள் அடிப்படையல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

தூத்துக்குடி மாவட்ட குடும்ப நலத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் 24.7.22 வரை ஸ்திரத்தன்மை இயக்கமாக அனுசரிக்கப்படுகிறது. அப்போது, வளர் இளம் பெண்களிடையே காணப்படும் ரத்த சோகை குறைபாட்டை முற்றிலும் ஒழித்தல், தாய், சேய் நலத்தை பாதுகாத்தல், பெண் கல்வியை ஊக்குவித்தல், இளம் வயது திருமணம் மற்றும் கர்பபங்களை தவிர்த்தல், பாலின பாகுபாடுகளை களைதல், சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல், வறுமையை ஒழித்தல் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த தகவலை தூத்துக்குடி மருத்துவம், ஊரகநலப் பணிகள் மற்றும் குடும்பநலம் துணை இயக்குனர் பொன் இசக்கி தெரிவித்து உள்ளார்.


Next Story