மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்


மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்
x

மயிலாடுதுறையில் மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ரதம் மற்றும் ஊர்வலம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மகாபாரதி ரதம் மற்றும் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கலெக்டர் மகாபாரதி கூறியதாவது:-நம் நாட்டில் குடும்பநலத் திட்டத்தை செயல்படுத்தியதின் விளைவாக பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. அளவான குடும்பமே வளமான வாழ்வுக்கு ஆதாரம் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டு குடும்ப நலத்திட்டத்தை தன்னார்வத்துடன் மக்களே முன் வந்து ஏற்றுக்கொள்கிறார்கள். ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முறை பற்றி வட்டார மற்றும் மாவட்ட அளவில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினாா்.முன்னதாக, கலெக்டர் தலைமையில் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் பொதுமக்களுக்கு குடும்ப நலத்திட்ட விளக்க கையேடுகளை கலெக்டர் வழங்கினார்.நிகழ்ச்சியில், இணை இயக்குனர் (சுகாதாரம்) டாக்டர் குருநாதன் கந்தையா, துணை இயக்குனர் (குடும்ப நலம்) ஜோஸ்பின் அமுதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன் மற்றும் செவிலியர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டனர்.



Next Story