ஆசிரியர்கள் போராட்டம்
ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்ற செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக போராட்டம் மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமையில் நடந்தது. கல்வி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். மாநில தலைமையிட செயலாளர் ராவணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் அரசு ஊழியர், ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கையான புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை நிறுத்தி வைக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும். ஆசிரியர் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். கூட்டத்தை மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், இணைச்செயலாளர் சுரேஷ், செய்தி தொடர்பாளர் ரஜினி, தலைமையிட செயலாளர் சரவணக் குமார், மாவட்ட துணை தலைவர் மூர்த்தி, கல்வி மாவட்ட பொறுப்பாளர் வேலுச்சாமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். முன்னாள் மாநில நிர்வாகி தர்மராஜ் உள்பட 100-க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் மாவட்ட செயலாளர் சந்தான கிருஷ்ணன் நன்றி கூறினார்.