பணியாளர்கள் திடீர் தர்ணா


பணியாளர்கள் திடீர் தர்ணா
x

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 2 தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பணியாளர்கள் திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 2 தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பணியாளர்கள் திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகராறு

ராமநாதபுரம் தேவேந்திரநகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் விஜயசேகரன் (வயது52). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் தனது மருமகன் செய்யாலூர் பிரதாப்சிங் என்பவருடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள உறவினர் ஒருவரை பார்த்து சாப்பாடு கொடுக்க மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

அப்போது அவசர வார்டு முன்பு உள்ளே செல்ல முயன்றபோது அங்கு பணியில் இருந்த பனையடியேந்தலை சேர்ந்த முருகன் (40) என்ற காவளாலி இருசக்கர வாகனத்தை உள்ளே கொண்டு செல்லக்கூடாது என்று தடுத்தாராம். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறின்போது முருகன் மற்றும் அவருடன் பணியாற்றும் காவலாளிகள் ஒன்று சேர்ந்து தாக்கியதாக கூறி விஜயசேகரன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தின்போது முருகனையும், உடன் பணியாற்றும் நந்தீஸ்வரன் என்பவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விஜயசேகரன் மற்றும் முருகன் ஆகியோர் அளித்த புகார்கள் குறித்து ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

துப்புரவு பணி

இந்தநிலையில் தங்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க கோரியும் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யக்கோரியும் நேற்று காலை ஆஸ்பத்திரியில் தனியார் ஒப்பந்த நிறுவன பாதுகாவல் மற்றும் துப்புரவு ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதன்பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story