விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x
திருப்பூர்


ஊத்துக்குளி தாலுகா நடுப்பட்டி ஊராட்சி புலவர்பாளையம் நித்தியஜீவபுரத்தில் 2013-ம் ஆண்டு 7 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. அந்த வீட்டுமனைகளுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பு அகற்ற கோரியும், தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றக் கோரியும், அனைத்து வீடுகளுக்கும் உறிஞ்சுகுழி அமைத்துதர கோரியும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு தாலுகா செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் தாலுகா தலைவர் மணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் கொளந்தசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் (பொறுப்பு) சாந்தி, துணை தாசில்தார் வசந்தா, ஊத்துக்குளி நில வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி குடியிருப்புகள் முன் கழிவுநீர் தேங்கும் பிரச்சனைக்கு ஊராட்சி நிர்வாகம் மூலமாக உடனடியாக உறிஞ்சுழி அமைப்பதற்கு பணி தொடங்கும் எனவும், முறைப்படி சர்வே செய்து ஆக்கிரமிப்பு அகற்றி வழித்தடத்தை 20 நாட்களுக்குள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story