தமிழ்நாடு கவர்னருக்கு சாம்பல் அனுப்பும் போராட்டம்
திருப்பூர்
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டிக்கும் விதமாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நேற்று போராட்டம் அறிவித்திருந்தனர். அதன்படி ஆன்லைன் சூதாட்டத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் சாம்பலை உடுமலை தலைமை தபால் நிலையத்தின் மூலம் கவர்னருக்கு அனுப்பும் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இதனையடுத்து உடுமலை கச்சேரி வீதியில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.கவர்னருக்கு எதிரான பதாகைகளுடன் வந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story