கஞ்சி தொட்டி திறந்து தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்


கஞ்சி தொட்டி திறந்து தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்
x

கஞ்சி தொட்டி திறந்து தரைக்கடை வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

திருச்சி

மலைக்கோட்டை:

திருச்சி மாநகரின் வணிக மையமாக விளங்கும் என்.எஸ்.பி. ரோடு, தெப்பக்குளம், தேரடி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்காமல், தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாமல் உள்ளது. இதனால் மணல் மற்றும் தூசிகள் வாரி இறைக்கப்பட்டு தரைக்கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி, பாதாள சாக்கடை பணிகளை மந்தகதியில் செயல்படுத்தி வரும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, ஏ.ஐ.டி.யூ.சி. தரைக்கடை வியாபாரிகள் நேற்று திருச்சி மலைக்கோட்டை அருகில் உள்ள தெப்பக்குளம் பகுதியில் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story