குழந்தைகளுக்கு நேர்மறை சிந்தனைகளை பெற்றோர் கற்று கொடுக்க வேண்டும்: போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்


குழந்தைகளுக்கு நேர்மறை சிந்தனைகளை பெற்றோர் கற்று கொடுக்க வேண்டும்: போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாழ்க்கையில் உன்னத நிலையை அடை குழந்தைகளுக்கு நேர்மறை சிந்தனைகளை பெற்றோர் கற்று கொடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

தூத்துக்குடி

குழந்தைகள் வாழ்க்கையில் உன்னத நிலையை அடைய ெபற்றோர் நேர்மறை சிந்தனைகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறினார்.

ரத்ததான முகாம்

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் போலீசாரின் சிறப்பு ரத்ததான முகாம் நேற்று நடந்து. முகாமுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, ரத்ததானம் என்பது ஒரு உயிரை காப்பாற்றக்கூடிய ஒரு உன்னதமான செயலாகும். நாம் பிறருக்கு ரத்ததானம் அளிப்பதன் மூலம் நமது ஆரோக்கியத்துக்கும் நல்லது. இன்னொரு உயிரையும் காப்பாற்ற முடியும். பொதுவாக பலருக்கு உடல் ரீதியாக ஏதாவது பிரச்சனைகள் இருக்கலாம். அதை நினைத்து, நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் அது மேலும் தீவிரமாகத்தான் செய்யுமே தவிர இயல்பு நிலைக்கு கொண்டு வருவது மிகவும் கடினம். நமக்கு ஒன்றுமில்லை, நம்மால் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு பிரச்சனைக்குரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது அது எளிதில் சீராகி நல்ல உடல் ஆரோக்கியத்தை பெற முடியும்.

நேர்மறை சிந்தனை

நம்மால் பிறருக்கு முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு எந்த ஒரு பிரச்சனையையும் தைரியத்தோடு அணுக பழகவேண்டும். நமது சிந்தனைகள் நேர்மறையாக இருந்தால் நாமும் வாழ்க்கையில் சிறந்து விளங்க முடியும். உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு நன்றி, மன்னியுங்கள் என்ற வார்த்தைகளின் அர்த்தத்தை சொல்லிக் கொடுத்து வளருங்கள். நீங்களும் ஏதாவது சிறிய தவறுகள் நடந்துவிட்டால் சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பும், உதவி செய்தால் நன்றியும் கூறுங்கள். நீங்கள் பொதுமக்களிடம் இனிமையான முறையில் அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்ளுங்கள். நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளும் போது நமது மனமும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் அவசர உதவிக்காக ரத்தம் தேவைப்படும் பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை அலுவலக தொலைபேசி எண்: 0461 2310351 என்ற எண்ணுக்கு அழைத்து ரத்தம் பெறலாம்' என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

முகாமில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ரத்ததானம் செய்தனர். ரத்த சேமிப்பு வங்கி மருத்துவ அலுவலர் சாந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர். முகாமில் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு புருஷோத்தமன், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனை முருகன், ஆயுதப்படை போலீஸ் ஏட்டு ராஜா, செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்சு டாக்டர் அச்சுதானந்தன், மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.


Next Story