இந்தி திணிப்புக்கு எதிராக தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
இந்தி திணிப்புக்கு எதிராக தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது
மதுரை
மத்திய அரசின் அலுவலகங்களில் அலுவல் மொழியாக இந்தியை கொண்டு வருவதற்காக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட நாடாளுமன்ற குழுவின் முடிவை திரும்ப பெற கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தல்லாகுளம் தலைமை தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story