மயிலாடுதுறை பஜார் கிளை தபால் நிலையத்தின் வேலை நேரம் மாற்றம் பொதுமக்கள் அதிருப்தி
மயிலாடுதுறை பஜார் கிளை தபால் நிலையத்தின் வேலை நேரம் மாற்றப்பட்டு இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை பஜார் கிளை தபால் நிலையத்தின் வேலை நேரம் மாற்றப்பட்டு இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கிளை தபால் நிலையம்
மயிலாடுதுறை நகரில் பஸ் நிலையம் அருகே தலைமை தபால் நிலையம் இயங்கி வருகிறது. மயிலாடுதுறை நகரில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு, ரெயில் நிலையம், கூறைநாடு, பஜார் உள்ளிட்ட இடங்களில் கிளை தபால் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இதில் மயிலாடுதுறை மணிக்கூண்டு அருகில் உள்ள பஜார் கிளை தபால் நிலையத்தின் வேலை நேரம் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றப்பட்டு அதன்படி கடந்த சில மாதங்களாக இயங்கி வருகிறது.
பொதுமக்கள் அதிருப்தி
இதனால் காலையில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஜார் கிளை தபால் நிலையத்தின் ேசவையை பெறுவதற்கு சிரமப்படுகின்றனர். மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தில் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இதன் காரணமாக பஜார் கிளை தபால் நிலையத்தை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் வேலை ேநரம் மாற்றப்பட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய தபால் துறையின் அனைத்து கணினி பயன்பாடும் மாலை 6 மணியுடன் முடிவடைவதால் அதற்குப்பிறகு பஜார் கிளை தபால் நிலையத்தில் எந்த ஒரு செயல்பாடும் மேற்கொள்ளப்படுவது இல்லை.
மாற்றி அமைக்க கோரிக்கை
எனவே மயிலாடுதுறை பஜார் தபால் நிலையத்தின் வேலை நேரத்தை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை என பழையபடி மாற்றி அமைக்க வேண்டும் என தபால்துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் என்பவர் அனைத்து அஞ்சல் துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.