ஈரோடு கோட்ட அலுவலகத்தில் இன்று தபால் தலை சேகரிப்பு கண்காட்சி;மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம்- முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் தகவல்


ஈரோடு கோட்ட அலுவலகத்தில் இன்று தபால் தலை சேகரிப்பு கண்காட்சி;மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம்- முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் தகவல்
x

ஈரோடு கோட்ட அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் தபால் தலை சேகரிப்பு கண்காட்சியில் மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம் என்று முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு

ஈரோடு கோட்ட அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் தபால் தலை சேகரிப்பு கண்காட்சியில் மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம் என்று முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய அஞ்சல் வாரம்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்படும். அதன்படி நேற்று முன்தினம் தேசிய அஞ்சல் வார கொண்டாட்டம் தொடங்கியது.

நேற்று வலுவூட்டல் தினம் நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) தபால் தலை தினமும், நாளை (புதன்கிழமை) தபால் தினமும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) சாமானியர் நல்வாழ்வு தினமும் கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி நேற்று அனைத்து அஞ்சலகங்களிலும் சிறப்பு முகாம் நடந்தது. மொடக்குறிச்சி அலுவலகத்தில் அஞ்சல் கண்காணிப்பாளர் கருணாகரபாபு தலைமையில் ஊர்வலம் நடந்தது.

இன்று (செவ்வாய்க்கிழமை) தபால் தலை சேகரிப்பு கண்காட்சி, ஈரோடு கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது. பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் இதில் கலந்து கொள்ளலாம்.

வினாடி-வினா

மேலும் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளிடம் தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக வினாடி -வினா நிகழ்ச்சி நடைபெறும். இதில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்படும். விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் தபால் தலை சேகரிப்பு கணக்குகளை தொடங்கலாம்.

இந்த வாரத்தில் தபால் நிலையங்கள் மற்றும் தபால்காரர்களிடம் மூத்த குடிமக்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் கணக்குகளை தொடங்கலாம்.

கடுக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகத்திலும், தாமரைபாளையம் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்திலும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி வரையும், பெருந்துறை கருக்கம்பாளையம் சமுதாய கூடத்தில் நாளை (புதன்கிழமை) முதல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரையும், கோபி கலிங்கியத்தில் நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரையும் ஆதார் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

மேற்கண்ட தகவல் ஈரோடு கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story