தபால் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் கூட்டம்


தபால் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் கூட்டம்
x

பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில வாடிக்கையாளர் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 28-ந்தேதி நடக்கிறது

திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு தபால் பணிகள் குறித்த குறைகள், தபால் சேவையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை உரிய விவரங்களுடன் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதில் நேரில் வரமுடியாத வாடிக்கையாளர்கள் தங்களின் குறைகள் மற்றும் ஆலோசனைகளை dotirunelveli.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் வருகிற 22-ந்தேதிக்குள் (வியாழக்கிழமை) அனுப்பலாம். இந்த தகவலை நெல்லை அஞ்சலக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் கோ.சிவாஜி கணேஷ் தெரிவித்து உள்ளார்.


Next Story