தபால் காப்பீடு திட்ட சிறப்பு முகாம்


தபால் காப்பீடு திட்ட சிறப்பு முகாம்
x

பட்டுக்கோட்டை கோட்டத்தில் தபால் காப்பீடு திட்ட சிறப்பு முகாம் நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை கோட்டத்தில் தபால் காப்பீடு திட்ட சிறப்பு முகாம் நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.

இது தொடர்பாக பட்டுக்கோட்டை கோட்ட தபால் கண்காணிப்பாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு முகாம்

பட்டுக்கோட்டை தபால் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தலைைம, துணை மற்றும் கிளை தபால் நிலையங்களில் தபால் ஆயுள் காப்பீடு திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் நாளையும்(9-ந் தேதி), நாளை மறுநாளும்(10-ந் தேதி) மற்றும் 23-ந் தேதி(புதன்கிழமை), 24-ந் தேதியும்(வியாழக்கிழமை) நடக்கிறது.தபால் ஆயுள் காப்பீடு திட்டமானது மத்திய அரசு நேரடியாக தபால் துறை மூலம் நடத்தும் திட்டமாகும். இதில் குறைவான பிரீமியம் வசூலிக்கப்பட்டு அதிகமான போனஸ் வழங்கப்படுகிறது.

தகுதியானவர்கள்

இந்த திட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பதிவு பெற்ற நிறுவன ஊழியர்கள், நிகர்நிலை பல்கலைக்கழக ஊழியர்கள், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்கள், தேசிய பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்ட கம்பெனி ஊழியர்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள், மென்பொருள் வல்லுநர்கள் சேரலாம்.மேலும் பாராமெடிக்கல் துறை சார்ந்தவர்கள், மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள், பேராசிரியர்கள், தணிக்கையாளர்கள், தொழில்சார்ந்த அனைத்து பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ, ஐ.டி.ஐ. முடித்தவர்களும் சேரலாம்.கிராமிய தபால் ஆயுள் காப்பீடு தி்ட்டத்தில் கிராமத்தில் உள்ள தகுதி வாய்ந்த மக்கள் அனைவரும் சேரலாம். பிரீமிய தொகை மற்றும் முதிர்வு தொகைக்கு முழுமையான வரிவிலக்கு உண்டு.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

செல்வமகள் சேமிப்பு கணக்கு சிறப்பு முகாம்

இதேபோல் அவர் விடுத்துள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், வருகிற 14-ந் தேதி(திங்கட்கிழமை) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை மற்றும் கிளை தபால் அலுவலகங்களில் வருகிற 14-ந் தேதி வரை செல்வமகள் மற்றும் செல்வமகன் சேமிப்பு கணக்குள் தொடங்கும் சிறப்பு முகாம் நடக்கிறது.இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்திலும், ஆண் குழந்தைகளுக்கு செல்வமகன் சேமிப்பு திட்டத்திலும் கணக்கினை அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் தொடங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story