ஆதார் சேவை சிறப்பு முகாமை அஞ்சலக அதிகாரி ஆய்வு


ஆதார் சேவை சிறப்பு முகாமை அஞ்சலக அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில் நடந்த ஆதார் சேவை சிறப்பு முகாமை அஞ்சலக அதிகாரி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

கழுகுமலை பேரூராட்சியில் இந்திய அஞ்சல் துறை கோவில்பட்டி கோட்டம் சார்பில் ஆதார் சிறப்பு சேவை முகாம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. கழுகுமலை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் சுப்பிரமணியன் முகாமினை தொடங்கி வைத்தார். கழுகுமலை தபால் நிலைய அலுவலர் கமல் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் சுரேஷ், முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குழந்தைகளுக்கான சிறுசேமிப்பு திட்டத்தை பொதுமக்களிடம் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி பயன்பெற செய்ய வேண்டும் என அலுவலக பணியாளர்களுக்கு ஆலோசனை கூறினார்.

முகாமில் பெயர் மற்றம், திருத்தம், ஆதாரில் செல்போன் எண் இணைத்தல் மற்றும் கை ரேகைகளை பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தது. கழுகுமலை மட்டுமன்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் கலந்துகொண்டனர். இப்பணியில் கழுகுமலை அஞ்சலக ஊழியர்கள் மாரிமுத்து, வெங்கடேஷ் மற்றும் கிளை அஞ்சலக ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.


Next Story