தபால் வாரவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு ;மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா வழங்கினார்


தபால் வாரவிழா போட்டிகளில்   வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு ;மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா வழங்கினார்
x

தபால் வாரவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசை மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா வழங்கினார்

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

தபால் வாரவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசை மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா வழங்கினார்.

பரிசு

குமரி மாவட்டத்தில் கடந்த 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை தேசிய அஞ்சல் வார விழா குமரி மாவட்ட தபால் கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. கடந்த 9-ந் தேதி தேசிய தபால் தினமானது "அகிலமும் அஞ்சலும்" என்ற கருப்பொருளிலும், 10-ந் தேதி "நிதி வலுவூட்டல்" நாளாகவும், 11-ந் தேதி தபால்தலை சேகரிப்பு தினமாகவும், 12-ந் தேதி தபால் மற்றும் பார்சல் தினமாகவும், 13-ந் தேதி "அந்தியோதியா தினமாக"வும் கொண்டாடப்பட்டது.

குளச்சல் துணை தபால் நிலையத்தில் செல்வ மகள் சேமிப்பு திட்ட பயனாளிகள், ஆயுள் காப்பீட்டு திட்ட பயனாளிகள் மற்றும் தபால் வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட தபால் கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் தலைமை தாங்கி பேசினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, ஜேம்ஸ் குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன் டாக்டர் பிரேம்குமார், அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் வடலூர் வாசகர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் புதிதாக கணக்குகள் தொடங்கிய குழந்தைகளுக்கு கணக்கு புத்தகங்களும், சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அக்குழந்தைகளுக்கு தபால் பெட்டி வடிவிலான உண்டியலும் வழங்கினார். மேலும் தபால் வார விழா சாதனையாளர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழும் வழங்கினார். முடிவில் குளச்சல் துணை தபால் அதிகாரி ஜஸ்டின் ஜோஸ் நன்றி கூறினார்.


Next Story