கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் விஷ்ணுதேவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜி.டி.எஸ். ஊழியர்களின் உறுப்பினர் சரிபார்ப்பு நடத்தி ஏ.ஐ.பி.இ.யு. ஜி.டி.எஸ். சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளான 12, 24, 36 வெயிட்டேஜ் மற்றும் மருத்துவ வசதி திட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும். அனைத்து பி.ஓ.க்களும் 4 மணி நேரம் 5 மணி நேரத்திற்கு மேல் வேலைப்பளு உள்ளதால், அதற்குரிய ஊதியத்தையும் வழங்க வேண்டும் அல்லது இலாகா பி.ஓ.வாக மாற்ற வேண்டும். டார்க்கெட் டார்ச்சர் என்று ஊழியர்களை துன்புறுத்த கூடாது. அனைத்து பி.ஓ.க்களுக்கும் தேவையான பொருட்கள் தாமதமின்றி வினியோகம் செய்ய வேண்டும். அனைத்து பி.ஓ.க்களுக்கும் தாமதமில்லாமல் இணையதள வசதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story